கொரோனாவின் பிடியில் கோவை மற்றும் சேலம்

 tamil.thesubeditor  Friday, September 25, 2020  10:16 AM   No Comments

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது.



மேலும் தமிழகத்தில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாக நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 88,784 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 66 லட்சத்து 8675 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது..



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right