இன்றைய தினம் -- செப்டம்பர் 29

1885 - உலகின் முதலாவது மின்சார திராம் (Tram) வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.
1916 - ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார்.
1833 - மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.
1850 - இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மீண்டும் அமைத்தார்.
1941 - உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
1962 - கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.

1971 - அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.
1993 - மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1926 – திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1981) பிறந்த தினம்
1928 – பிரிஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இ. 2012) பிறந்த தினம்
1947 – மா. சுதர்சன நாச்சியப்பன், தமிழக அரசியல்வாதி பிறந்த தினம்
1913 – ருடோல்ப் டீசல், டீசல் பொறியைக் கண்டுபிடித்த பொறியியலாளர் (பி. 1858) நினைவு தினம்

Similar Post You May Like
-
இன்றைய தினம் - பிப்ரவரி 25
Thu, February 25, 2021 No Comments Read More...2006 - உலகின் மக்கள் தொகை 650 கோடியை தாண்டியது. 1835 – இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது 1965 – விராலிமலை சண்முகம், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்
-
இன்றைய தினம் - டிசம்பர் 26
சுனாமி பேரலை தாக்கிய தினம் 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடு
-
இன்றைய தினம் - நவம்பர் 24
படிவளர்ச்சி நாள் படிவளர்ச்சி நாள் (Evolution Day) என்பது உயிரங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும். இது நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1859 ஆம் ஆண்டில் இதே நாளில் சார
