சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கோவை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு கோரிக்கை

 Tuesday, September 29, 2020  07:31 AM   Array comment(s)

சிறுவாணி அணையில் இருந்து கேரளா அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டாத நிலையே நீடித்து வருகிறது, இதனால் அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இந்நிலையில் சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கோவை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.சிறுவாணி அணையில் சராசரியாக 44.61 அடி என்ற அளவுக்கு நீர் தேக்கப்படுகிறது. 45 அடியைத் தாண்டி நீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில், அடிக்கடி அணையில் இருந்து கேரளா நீர்பாசனத்துறை அதிகாரிகள் தண்ணீரைத் திறந்துவிட்டு வெளியேற்றினர். நடப்பு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 4 முறை இதேபோல், சிறுவாணி அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கேரளாவுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கோவை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


SundaramKumaraswami SundaramKumaraswami commented on 10 month(s) ago
வற்றாத உயிர் நீர் சிறுவாணிக்கு முதல் வணக்கம் 🙏!அணையின் நீர்மட்டம் அளவை உயர்த்த கோவை மாவட்ட நிர்வாகத்தின் நல்முயற்சிக்கு பாராட்டுக்கள்!! 50அடிஉயரம் கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டத்தை நிரம்ப விடாமல் கேரள மாநில அரசு எதோ காரணம் சொல்லி 45அடிஅளவுக்குமேல்உள்ளதண்ணீரை அவர்களுக்கு தேவையோ இல்லையோ ஆனால் எடுத்துக்கொள்கிறது,நீதிமன்ற உத்தரவை மதிக்கும் தமிழக அரசும் விட்டுக் கொடுத்து உள்ளது! இதற்கு ஒரே வழி 45அடிக்கு மேல் நீர்மட்டம் உயராமல் இருக்கும் தண்ணீரை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வழியோர கீழ், மேல் தொட்டிகளுக்கோ, அல்லது மக்களின் வீட்டுஇணைப்பிற்கோ, வினியோகம் செய்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்!! கேரள அரசு வீணாக்கும் உபரிநீர் கோவை மக்களுக்கு குடிநீராகுமே! இந்த யோசனை சாத்தியப்படுமா! தமிழ் நாடு குடிநீர் வாரியமும்,கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி உயர் அதிகாரிகள் குழுவும் இந்த கருத்தை படித்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்!! நன்றி 🙏சுந்தரம்,கோவை. 9894633441.
Subscribe to our Youtube Channel