கோவையில் ஹோட்டல் சாம்பாரில் எலி. வாடிக்கையாளர் அதிர்ச்சி...

 Monday, November 23, 2020  09:28 PM   No Comments

கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பாடு பார்சல் வாங்கியபோது சாம்பாரில் எலி செத்துக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.



கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த ஒரு நோயாளியின் உறவினர் ஒரு உணவு உண்பதற்காக மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் பார்சல் வாங்க சென்றார், அப்போது பார்சலை பிரித்து சாப்பிட முற்பட்டபோது, அதில் எலிக் குட்டி ஒன்று கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் சாம்பாருடன் சென்று, ஹோட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த புகாருக்குப் பிறகு, ஹோட்டல் சாம்பார் முழுவதையும் ஹோட்டலுக்குப் பின்புறமுள்ள வாலாங்குளத்தின் கரையில் கொட்டியுள்ளனர். இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel