இன்றைய தினம் - நவம்பர் 24

படிவளர்ச்சி நாள்
படிவளர்ச்சி நாள் (Evolution Day) என்பது உயிரங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும். இது நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1859 ஆம் ஆண்டில் இதே நாளில் சார்ல்ஸ் டார்வின் இந்நூலை எழுதி வெளியிட்டார். படிவளர்ச்சிக் கொள்கையை முதன் முதலில் அறிவித்த டார்வினின் பிறந்தநாள் பெப்ரவரி 12 டார்வின் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
2015 – ஏ. எஸ். பொன்னம்மாள், தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர் நினைவு தினம்
1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
1642 - ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.
2002 – ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

1976 – துருக்கியின் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1961 – அருந்ததி ராய், இந்திய எழுத்தாளர் பிறந்த தினம்
1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார்.
1971 – வாசிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் பாரசூட்டுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
1914 – முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார்.

Similar Post You May Like
-
இன்றைய தினம் - டிசம்பர் 26
Sat, December 26, 2020 No Comments Read More...சுனாமி பேரலை தாக்கிய தினம் 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடு
-
இன்றைய தினம் -- செப்டம்பர் 29
1885 - உலகின் முதலாவது மின்சார திராம் (Tram) வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது. 1916 - ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார். 1833 - மூன்று வயதுள்ள இரண்டாம் இச
-
இன்றைய தினம் -- செப்டம்பர் 28
உலக வெறிநோய் தினம் உலகம் முழுவதும் நாய்கடியால், ஆண்டுக்கு 55 பேர் வரை உயிரிழப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது. வெறிநாய் கடிக்கு மருந்து கண்டுபிடித்த லுாயி பாஸ்டர் இறந்த தினமான செப். 28ம் தேதியை, உலக வெ
