மீண்டும் ஊருக்குள் புகும் காட்டு யானைகள்; பெரியநாயக்கன்பாளையம் மக்கள் பீதி

 Tuesday, November 24, 2020  08:42 AM   No Comments

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் சில நாட்களாக காட்டுயானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை விளைவித்து வருகிறது, இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். வனத்துறையினர் இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை புறநகர், வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உட்பட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இது குறித்து அங்குள்ள ஒரு விவசாயி கூறும்போது... 'காட்டுயானைகள் எங்களது விவசாய நிலங்களுக்குள் புகுந்து 300 வாழைகளை சேதப்படுத்தியுள்ளன. இதற்கு நஷ்டஈடு தொகையை வனத்துறையினர் வழங்கவேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right