காரசாரமான காய்ந்த மிளகாய் சட்னி

மல்லிகைப்பூ இட்லியும் காரசாரமான மிளகாய் சட்னிக்கு ஈடில்லா இணையாகும். எளிதாக இருந்தாலும் சுவையோ அலாதி. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம்.
தேவையான பொருட்கள் :
வரமிளகாய் - 5 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
புளி - சிறிது,
பூண்டு - 5 பல்
உப்பு- 1 /2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
வெங்காயம், தக்காளி, உப்பு, புளி, மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைக்கவும்.
குறிப்பு : மற்றொரு விதம் இந்தக்கலவையை வதக்கியும் அரைக்கலாம்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
கறிவேப்பிலை, அரைத்த துவையலையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
சுவையான காரசாரமான மிளகாய் சட்னி தயார்.
இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.

Similar Post You May Like
-
வாங்க சிக்கன் நூடில்ஸ் செய்யலாம்...
Sun, March 7, 2021 No Comments Read More...குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிக்கன் நூடுல்ஸ் என்றால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இன்று எளிய முறையில் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையா
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: எள் பூரண கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று எள் பூரண கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மேல் மாவு செய்ய: கொழுக்கட்டை
-
குழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி
காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சப்பாத்தியில் காய்கறிகளை வைத்து செய்து கொடுக்கலாம். இன்று கேரட் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துருவிய கேரட் - ஒரு கப
