கோவை மாவட்டம் முழுவதும் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்..! காலை முதலே விறுவிறு வாக்குப்பதிவு!!
Tuesday, April 6, 2021
10:22 AM
No Comments

இன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாவட்டம் முழுவதும் வாக்களிப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 427 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 5 ஆயிரத்து 316 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இளைஞர்களின் கூட்டம் இந்தமுறை அதிகமாக காணப்பட்டது.
வாக்குச்சாவடிக்கு வரும் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு சானிடைசர்கள் மற்றும் கையுறை வழங்கப்பட்டு வருகிறது.


Please login/signup then give your valuable answers
Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel