சென்னையில் வாக்களித்தவுடன் 4 மணி நேரத்தில் கோவைக்கு விரைந்து வந்த கமல்

 Tuesday, April 6, 2021  12:56 PM   No Comments

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் வாக்களித்துவிட்டு அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் கோவை தெற்கு தொகுதிக்கு வந்துள்ளார்

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியில் இருந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கு தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குப்பதிவாகி உள்ளது.



மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இன்று காலையிலேயே சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷராஹாசனும் உடன் வந்து வாக்களித்தார்.

அதன்பின் நேராக கிளம்பி கோவைக்கு சென்றார். சென்னையில் 7.30 மணிக்கு வாக்களித்த கமல்ஹாசன், ஹெலிகாப்டர் மூலம் உடனே கோவைக்கு புறப்பட்டு வந்துள்ளார் . காலை 11 மணிக்கு முன்னதாக கோவைக்கு வந்த கமல், அங்கிருந்து கோவை தெற்கு தொகுதிக்கு காரில் சென்றார்.

பிறகு கோவை தெற்கு தொகுதி நிலவரத்தை பார்வையிட்டார். அங்கு இருக்கும் வாக்கு சாவடிகளுக்கு சென்று நிலவரத்தை பார்வையிட்டார். மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள், ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்று சோதனை செய்தார்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right