கோவையில் 105 வயதான மூத்த வாக்காளர் வாக்களித்தார்

 சமயம்  Tuesday, April 6, 2021  02:15 PM   No Comments

கோவை கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர், 1916 ஆம் ஆண்டு ஜுன் 1 ஆம் தேதி பிறந்தவர். தற்போது அவருக்கு வயது 105. விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர்.

காமராஜர், காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளையும் தான் பார்த்துள்ளதாக அவர் பெருமை பொங்க கூறுகிறார்.
மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அனைவரையும் அவர் வலியுறுத்துகிறார்.பேரனுடன் சென்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
பிறருக்கு அறிவுறுத்துவதுடன் நில்லாமல், இந்த தள்ளாத வயதிலும் தனது வீட்டிலிருந்து 2,000 அடி தூரம் நடந்து சென்று கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு மாரப்ப கவுண்டர் தனது ஜனநாயகக் கடமையை இன்றுவரை ஆற்றி வருகிறார்.

105 வயதானவர் வாக்களித்து செல்கிறார் என தேர்தல் நடத்தும் அலுவலர் சொன்னதும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
பாஜக வானதிக்கு எதிராக ஓரணியில் திரண்ட காங்கிரஸ், நாம் தமிழர், கமல்!
105 வயதில் ஓட்டுப்போட்டு திரும்பியவரை கருப்பராயன்பாளையத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பெருமையோடு பார்க்கின்றனர்Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right