நம்மாழ்வார்களாக உருமாற, தமிழகத்தின் வேளாண்மையை மீட்டுருவாக்கம் செய்ய. வாருங்கள்...

 Thursday, December 27, 2018  10:44 AM   No Comments

நம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமான அனைவருக்கும் வணக்கம்.

நம்மாழ்வாரின் நினைவு நாள் நிகழ்வை ஜனவரி 1 அன்று எப்போதும் போல சிறப்பாக நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் கஜா புயலின் தாக்கத்தால் 8 மாவட்டங்களில் பெரும் இழப்பை அனைத்துத் தரப்பும் மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. பாதிக்கப்பட்ட பெருவாரியான மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் நம்மாழ்வாரின் நினைவு நாளைக் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள் வருகை இன்றி பெரிய நிகழ்வாக நடத்தாமல் எளிய நினைவஞ்சலியாகக் காலை 10 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படுகின்ற புயல், மெரும் மழை, வறட்சி ஆகியவை நமக்கு புதிய புதிய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை, குறிப்பாக விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்திட செய்ய வேண்டியவை குறித்தும்

பருவநிலை மாற்றத்தின் காரணமாக இது போன்ற புயல்களாலும், பெரும் மழையாலும் கடற்கரை மாவட்டங்களும், காவிரிப் பாசனப் பரப்பும் பருவநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் பாதிக்கப்படாதிருக்க விவசாய முறைகளில் செய்திட வேண்டிய மாற்றங்கள் குறித்தும்உள்மாவட்டங்கள் அடிக்கடி சந்திக்கும் வறட்சியை தாக்குப் பிடிக்கும் விவசாயம் குறித்தும் ஆழமாகக் கலந்துரையாடி பல்லாயிரம் ஆண்டுக்காலம் விவசாயத்தால் சிறப்பான வாழ்வு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் வேளாண் வாழ்வினை, வேளாண் சூழலை பருவநிலை மாற்றத்தைத் தாக்குப் பிடிக்கும் ஒன்றாக மாற்றிடுவதற்கான அறிவுச் சூழல், செயல்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளோம்

பருவ நிலை மாற்றக் காலத்திற்கேற்ற தற்சார்புள்ள இயற்கையோடு இணைந்த மாற்று வாழ் முறை நாம் மீண்டும் கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே இந்தமுறை ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளில் மேற்கண்ட விடயங்களில் உள்ள கூறுகளை ஆய்வு செய்யும் பொருட்டு நண்பர்கள் அனைவரும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கெடுத்து அந்தக் கலந்துரையாடலின் முடிவுகளை மக்களுக்கு எடுத்துச் செல்வோம் ஆகவே அனைவரும் இந்த நினைவஞ்சலி நிகழ்வில் அனைவரும் எப்பொழுதும் போல அஞ்சலி செலுத்திவிட்டு கலந்துரையாடலில் பங்கெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுடன் இருக்கிறோம் என்ற உணர்வையும், தங்களின் வாழ்வை மீட்டுவாக்கம் செய்யத் தமிழகம் உடன் இருக்கிறது என்ற நம்பிக்கையையும் விதைப்போம்.

வாருங்கள் நண்பர்களே, நம்மாழ்வார்களாக உருமாற, தமிழகத்தின் வேளாண்மையை மீட்டுருவாக்கம் செய்ய.

குறிப்பு - நிகழ்வு மிக எளிமையானதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற் எதிர்கால வேளாண்மை, வாழ்வியல் குறித்த கலந்துரையாடலில் பங்களிப்பு அளிக்க உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். தங்கள் வருகை குறித்த முன் தகவலை வரவேற்கிறோம். நிகழ்வு மதிய உணவு வரை மட்டுமே. நினைவிடத்தில் 10 மணிக்கு அஞ்சலி. பின் மதியம் உணவு வரை கலந்துரையாடல்.

வானகம், அறங்காவலர் குழு
தொடர்புக்கு : 94459 68500, 99442 36236, 88258 10072Similar Post You May Like

 • வாருங்கள் வாகை மரம் வளர்ப்போம்...

   Thu, January 3, 2019 No Comments Read More...

  வாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற

 • பெண்கள் விரும்பும் வீட்டுத்தோட்டம்

   Tue, January 1, 2019 No Comments Read More...

  தனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பது அனைவருக்கும் சாத்திமான ஒன்றுதான் என்று தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். தனி வீடுகள் மற்று

 • இயற்கை முறையில் புளியமரம் சாகுபடி

   Sun, December 30, 2018 No Comments Read More...

  புளியமரம் சகுபாடி குறைந்த செலவில் நீண்ட காலம் பலன் தரக்கூடிய ஒன்றாகும். புளி அணைத்து காலங்களிலும் தேவைப்படும் ஒன்றாகும். ஆடிப்பட்டம் புளி சாகுபடி செய்ய சிறந்த பட்டமாகும். புளி வெப்பம் மற்றும் வறட்சியை
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel