விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் கொரோனாவை ஒழிப்போம்; மீண்டும் ஊரடங்கு வேண்டாம்..!!!!

 dinamalar  Thursday, April 22, 2021  07:11 AM   No Comments

கொரோனாவின் தாக்குதலில் இருந்து மீண்டு, 'அப்பாடா...' என்று ஆசுவாசப்பட்டு நிமிரும் முன், இதோ இரண்டாவது அலை, ஆக்ரோஷமாக எழுந்துள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த, தற்போது துவங்கியுள்ள கட்டுப்பாடுகள் ஆரம்பம் தான்.பாதிப்புகள் குறையாவிட்டால், கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்கும். மீண்டும் ஒரு முழுமையான ஊரடங்கு, 15 நாட்களுக்கு வருமானால், கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.15 நாள் ஊரடங்கு தொடர்ந்தால், வாழ்வாதாரமே பாதிக்கப்படும். பொருளாதாரம் மோசமடையும். தொழில் நகரமான கோவையின் இயக்கம் ஸ்தம்பிக்கும்.

இதை தவிர்க்க வேண்டிய கடமை, நம் ஒவ்வொருவரின் கைகளிலும் உள்ளது.நிலைமையை உணர்ந்து, ஒவ்வொருவரும் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி, ஒத்துழைக்குமாறு கேட்கின்றனர், கோவை தொழில், வர்த்தக துறையினர்.'75 சதவீத பாதிப்பு வரும்' ஜவுளித்தொழிலை பொருத்தவரை, தொடர் செயல் திட்டங்களை கொண்டவை. இரவு பகல் எல்லா நேரங்களிலும் இயங்குவதால், இதன் உற்பத்தி சீராக இருக்கும். இரவு மற்றும் ஞாயிறு நிறுத்தப்படுவதால், ஜவுளித் தொழில் சுமார், 75 சதவீதம் வரை பாதிக்க வாய்ப்பு உள்ளது.--அஸ்வின் சந்திரன்தலைவர்,தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா)'ரூ.500 கோடிக்கு பாதிப்பு'இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்களுக்கு, மூலப்பொருட்கள் வருகை இரவில் மட்டுமே இருக்கும்.

சென்ற ஆண்டு வெளிமாநில தொழிலாளர்கள் சென்றதால், கட்டுமானத்துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மீண்டும் தற்போது தொற்று பரவுவதால், தொழிலாளர்கள் மீண்டும் புறப்பட தயாராகி வருகின்றனர். இது கட்டுமான தொழிலை பாதிக்கும் என்பதால், முழு ஊரடங்கு வராமலிருக்க, விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.Similar Post You May Like

 • கொரோனா ஊரடங்கும் குடும்ப உறவுகளும்

   Thu, June 10, 2021 No Comments Read More...

  கொரோனா பெருந்தொற்று அனைவரின் வாழ்க்கையையும் திருப்பி போட்டுள்ளது. மக்கள் தங்கள் தாய், தந்தை, குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் போன்ற தங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக நா

 • மே 23- ஆமையின பாதுகாப்பு தினம்

   Sun, May 23, 2021 No Comments Read More...

  மே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவதற்கு குறித்த விடயத்தின் முக்கியத்துவமே மூல காரணமாகும். சர்வதேச தினங்களின் கருப்பொரு

 • ஒருநாள் கொரோனா பாதிப்பு: உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

   Sat, April 24, 2021 No Comments Read More...

  இந்தியாவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 345,147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2,621 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்தியாவில் 2,550,7
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel