கோவை ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள் மூடப்பட்டது; பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை

 Saturday, April 24, 2021  10:30 AM   No Comments

கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு பலகைகள் பூங்காக்கள் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு உள்ளன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளம் ஆகிய குளக்கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து இந்த ஸ்மார்ட் சிட்டி பூங்காக்களும் மூடப்பட்டு உள்ளது. தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளோம். என அதிகாரிகள் தெரிவித்தனர்Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel