கோவையில் குறைகிறது கொரோனா தொற்று; நேற்று 1,895 பேர் பாதிப்பு

 Monday, June 14, 2021  08:32 AM   No Comments

கோவையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,895 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 540 ஆக உயா்ந்துள்ளது.

கடந்த வாரங்களில் 4 ஆயிரத்தை தொட்ட கொரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நல்ல பலன் கிடைத்து வருகிறது.



நேற்று மட்டும் கோவை அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 19 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 1,735 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,534 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரத்து 188 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 17 ஆயிரத்து 617 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel