கோவை மாவட்ட புதிய ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமனம்: கொரோனவை கட்டுப்படுத்த தீவிரம் காட்டுவதாக அறிவிப்பு

 Monday, June 14, 2021  09:34 AM   No Comments

தென்காசி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 182-வது ஆட்சியராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.சமீரன், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சட்டப் பிரிவில் முதுகலைப் பட்டயப் படிப்பு படித்துள்ளார். அதன் பின்னர், குடிமைப் பணித் தேர்வு எழுதி, கடந்த 2012-ம் ஆண்டு பேட்ச் நேரடி ஐஏஎஸ் அதிகாரியாக ஜி.எஸ்.சமீரன் தேர்வு செய்யப்பட்டார்.இவர், பரமக்குடி துணை ஆட்சியராகவும், ராமநாதபுரம் மாவட்டம் கூடுதல் ஆட்சியராகவும் (வருவாய்ப்பிரிவு), பாக் ஜலசந்தி திட்ட இயக்குநர் (மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர்), மீன்வளத்துறை இயக்குநர் மற்றும் டி.என்.எப்.டி.சி மேலாண்மை இயக்குநராக பணியாற்றியுள்ளார். நில நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, திட்ட மேலாண்மை, மின் ஆளுமை, பொதுத்துறை நிறுவன மேலாண்மை மற்றும் வளர்ச்சிப் பிரிவுகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்.

பொது சுகாதாரம், ஊரக வாழ்க்கை, நிர்வாகத்தில் பங்கேற்பு, கலாச்சார சுற்றுலா ஆகியவற்றில் ஆர்வம் மிகுந்தவர். மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.எஸ்.சமீரனின் சிறப்பான நடவடிக்கையால், தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel